புவனா சின்னுசாமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : புவனா சின்னுசாமி |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 28-Aug-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 65 |
மவுன சாயம் பூசி
உடலையும் மனதையும்
சேர்த்துக் கோர்த்த மாலையாய்....
காய்ந்த நிலத்தில்
பாய்ந்த நீரின்
திரட்சி போல்
புனிதத்தின்
தூய்மைத்துவத்தில்
ஒளிரும் காதல்!
உமிழ் நீருக்குள்
புதையுண்ட
சுவையணுவாக....
துவாரக் கூட்டுக்குள்
நடனமிடும்
காற்றின் இசையாக
பாம்பின் சட்டைக்குள்
பரிணமிக்கும்
பாம்பின் பிம்பமாகி
காற்றிடைவெளி அற்ற
நீண்ட வனத்திற்குள்
ரிங்காரமிடும் ஒற்றை
பூச்சியின் கற்பனை
வாழ்வாகியது.....
காதல்!
மவுன சாயம் பூசி
உடலையும் மனதையும்
சேர்த்துக் கோர்த்த மாலையாய்....
காய்ந்த நிலத்தில்
பாய்ந்த நீரின்
திரட்சி போல்
புனிதத்தின்
தூய்மைத்துவத்தில்
ஒளிரும் காதல்!
உமிழ் நீருக்குள்
புதையுண்ட
சுவையணுவாக....
துவாரக் கூட்டுக்குள்
நடனமிடும்
காற்றின் இசையாக
பாம்பின் சட்டைக்குள்
பரிணமிக்கும்
பாம்பின் பிம்பமாகி
காற்றிடைவெளி அற்ற
நீண்ட வனத்திற்குள்
ரிங்காரமிடும் ஒற்றை
பூச்சியின் கற்பனை
வாழ்வாகியது.....
காதல்!
கால ஓட்டத்தின்
கைதிகளாய்.....
இத்துப்போன விறகின்
துகள்களாய்....
வேடிக்கை மனிதர்களின்
நாடக வேட்கையில்...
பின்னுக்குத் தள்ளப்பட்ட
மானுடப் பேழைகள்
நாம்....
எம் மண்
எம் இனம்
எம் கலாச்சாரம்
எல்லாம் வேண்டும்
ஏனோ ?
என் மக்களுக்கு
தாய்மொழி மட்டும்
வேண்டாம்
தம் பிள்ளைகளை செதுக்க......
என்னவொரு
நாடக பூமி இது!!!!!!!!
அறிவை முடமாக்கி
அடக்கு முறையால்
ஆட்கொண்டு
கண்ணீருக்குள் மட்டும்
தன்னை இருத்திக் கொண்டு
கருத்து
சுதந்திரம் அற்ற
உலக வெளிக்குள்
உலவும் பிண்டமாக....
மனம் உடைந்த
கீறலில்
உதிரம் புடைத்து நிற்க
உடைமை, கௌரவம் என்ற
நிலையற்ற மாய
பாவனைகளுக்குள்
சிக்கி நடித்து கொண்டிருப்பவர்களால்
தீர்மானிக்கப்படும்
என் வாழ்வு........
ஆண் எனும்
ஆதிக்க வெளிக்குள்
உயிரற்ற பொம்மையானேன்
பெண் என்பதால்..........
மலைத்து போய்விட்டது
மலைக்கு...
இனி மனிதன்
ஆண்ட்ராய்டுகளிலே
உணவு உடை உறைவிடத்தை
உருவாக்கி கொள்வான்
எனில்...
இன்னும் கொஞ்சம் கொட்டித்
தீர்த்திருக்கலாம்.....
பொய்ம்மை இல்லா
கற்பனை வெளியில்
மிதந்து
குட்டி குட்டி
பொம்மைகளுக்கு
உயிர்
கொடுத்து
உறங்க வைத்துக்
குளிப்பாட்டி உரையாடி
மகிழும் மழலையின்
சிரிப்போடு
நான்!
கை சூப்பியபடி
ஒரு சிறுமியும்...
கால்மேல் கால்போட்டபடி
ஒரு சிறுவனும்
என்னை ஏனோ
கவர்கிறார்கள்...
என்பால்ய பருவத்தில்
இப்படி இருந்திருப்பேனோ
நான் ?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
துருதுருவென
விளையாடி
மழலைமொழி பேசி
ஓடும் ரெயிலில்
ஓடித்திரியும்
அச்சிறுமியை
காண்கையில்..
மழலையாகவே
இருந்திருக்ககூடாதா
என ஏங்குகிறது
மனம்...!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
வாயை திறந்தபடி
துயிலும்
முதியவரை
காண்கையில்...
தூங்கிய
பாட்டியின் வாயில்
துண்டுத்தாளைத்
திணித்து
அடிவாங்கியது
வலிக்கிறது
இன்னும்...
:::
மலைத்து போய்விட்டது
மலைக்கு...
இனி மனிதன்
ஆண்ட்ராய்டுகளிலே
உணவு உடை உறைவிடத்தை
உருவாக்கி கொள்வான்
எனில்...
இன்னும் கொஞ்சம் கொட்டித்
தீர்த்திருக்கலாம்.....
மலைத்து போய்விட்டது
மலைக்கு...
இனி மனிதன்
ஆண்ட்ராய்டுகளிலே
உணவு உடை உறைவிடத்தை
உருவாக்கி கொள்வான்
எனில்...
இன்னும் கொஞ்சம் கொட்டித்
தீர்த்திருக்கலாம்.....
கொட்டித் தீர்த்திருக்கலாம்
கவிதையால்
என் வலிகளை....
பறிக்கப்பட்ட சுதந்திரம்
விஷம் கொண்ட பாம்பாய்
ஆட் கொண்டுவிட
தனிமையில் போராடி
கற்பனையில்
உயிர் வாழ்கிறேன்
சுதந்திரமாய்......
பரவச பறவையாகிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
புரண்டுப் புதைந்த
பூலோகப் பூக்களின்
வர்ணம் பிசைந்து ...
மிரண்டு விழுந்த
மின்னலின் முகத்தில்
மின்சாரம் பிடுங்கி ..
வெடித்துப் பிளந்த
எரிமலைப் பிழம்பில்
என்னுடலை அழுத்தி ...
சரிந்து உடைந்த
பனிமலைச் செதிலில்
விழிகளை கிழித்து ...
உதிர்ந்து வீழ்ந்த
உயிரின் நகலில்
உணர்வினை உரித்து ...
முதிர்ந்து முனையும்
காதலின் கவியில்
தேன்மொழியை தெளித்து ...
அதிர்ந்துத் தெறிக்கும்
மூளையின் துகளில்
யாவையும் பதித்து ....
என்னுள் ..
உன்னைப் படைத்து
பரவச பறவையாகிறேன் ,..
- இராஜ்குமார்
அறிவை முடமாக்கி
அடக்கு முறையால்
ஆட்கொண்டு
கண்ணீருக்குள் மட்டும்
தன்னை இருத்திக் கொண்டு
கருத்து
சுதந்திரம் அற்ற
உலக வெளிக்குள்
உலவும் பிண்டமாக....
மனம் உடைந்த
கீறலில்
உதிரம் புடைத்து நிற்க
உடைமை, கௌரவம் என்ற
நிலையற்ற மாய
பாவனைகளுக்குள்
சிக்கி நடித்து கொண்டிருப்பவர்களால்
தீர்மானிக்கப்படும்
என் வாழ்வு........
ஆண் எனும்
ஆதிக்க வெளிக்குள்
உயிரற்ற பொம்மையானேன்
பெண் என்பதால்..........
நண்பர்கள் (11)

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

ganesh roy
nagai

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்

GURUVARULKAVI
virudhunagar
