நாடக பூமி

கால ஓட்டத்தின்
கைதிகளாய்.....
இத்துப்போன விறகின்
துகள்களாய்....
வேடிக்கை மனிதர்களின்
நாடக வேட்கையில்...
பின்னுக்குத் தள்ளப்பட்ட
மானுடப் பேழைகள்
நாம்....
எம் மண்
எம் இனம்
எம் கலாச்சாரம்
எல்லாம் வேண்டும்
ஏனோ ?
என் மக்களுக்கு
தாய்மொழி மட்டும்
வேண்டாம்
தம் பிள்ளைகளை செதுக்க......

என்னவொரு
நாடக பூமி இது!!!!!!!!

எழுதியவர் : புவனா சின்னுசாமி (12-Feb-19, 10:16 am)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
Tanglish : naadaga poomi
பார்வை : 111

மேலே