காதல்

மவுன சாயம் பூசி
உடலையும் மனதையும்
சேர்த்துக் கோர்த்த மாலையாய்....
காய்ந்த நிலத்தில்
பாய்ந்த நீரின்
திரட்சி போல்
புனிதத்தின்
தூய்மைத்துவத்தில்
ஒளிரும் காதல்!
உமிழ் நீருக்குள்
புதையுண்ட
சுவையணுவாக....
துவாரக் கூட்டுக்குள்
நடனமிடும்
காற்றின் இசையாக
பாம்பின் சட்டைக்குள்
பரிணமிக்கும்
பாம்பின் பிம்பமாகி
காற்றிடைவெளி அற்ற
நீண்ட வனத்திற்குள்
ரிங்காரமிடும் ஒற்றை
பூச்சியின் கற்பனை
வாழ்வாகியது.....

காதல்!

எழுதியவர் : புவனா சின்னுசாமி (14-Feb-19, 4:26 pm)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
Tanglish : kaadhal
பார்வை : 59

மேலே