தம்பிப் பயலே தம்பிப் பயலே
ஊதடா சங்கு உனக்கு நீயே மக்கு....!!
சாவுடா வெந்து சந்தோசம் இந்த கிக்கு...!!
கன்னத்துல பொந்து கட்டழகு டொக்கு...!!
கன்றாவி ஸ்டெயிலு.! நீ வாழ்க்கையிலே பெயிலு..!!
பொணமா..ஆனபின்னே
மனம் மாற முடியுமா ? நல்ல
குணமா புகைப்பது ? உன்
நுரையீரல் ஆகுமடா
அசிங்க ரெட் லைட் ஏரியாவா ....!!
வாயத் தொறந்து நீ
வைக்கல சிகரட்டு...
வாய்க்கரிசிக்கு ஒத்திகைய
வச்சி வச்சி பாக்குற.....
சொல்லுறத சொல்லிப் புட்டேன்
திருந்துடா தம்பி....
சொதப்புனா நீ இந்த பூமிக்கு
வேண்டாத டம்மி.....!!

