கவனம்
கவனம்..
கல் தடுக்கி விழுந்தது போல்
பாவனை உண்டாக்கி
இடறி விழ வாழ்க்கை
கால் வாரிவிடத் துடிக்கும்
சக மனிதருண்டு ஜகத்தில் உறவாய்...
பசுத்தோல் போர்த்திய புலியன்ன
தேன் குழைத்த
வார்த்தை ஜாலத்தால்
மதிமயக்கி நற்பாதை மாற்றும்
சக மனிதருண்டு ஜகத்தில் நட்பாய்...
பாலின் நிறமொத்த கள் போல்
திறம் மிக்க நல்லவராய்
முகம் காட்டி
கூட இருந்தே குழி பறிக்கும்
சக மனிதருண்டு ஜகத்தில் உயிராய்...
உறவாய் நட்பாய் உயிராய்
உறவாடி கெடுக்கும் முகமூடி மனிதரை
இனம் கண்டு கவனமாய்
வாழ்ந்து வழிநடத்தும்
சக மனிதரும் உண்டு ஜகத்தில் நல்லோராய்...
எல்லோரும் போற்றும்
நல்லோர் பதம் பற்றி என்றென்றும்
ஒழுக்கப் பண்பில் மாறாமல்
வாழ்ந்து காட்டியே எதிர்
சக மனிதருக்குத் தொண்டு ஜகத்தில் ஒளியாகிடு...!!
... நாகினி