அப்பா சொன்ன கதை

அப்பா சொன்ன கதை

ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் என்றார்.

(1) எப்பவுமே வெளியில் செல்லும்போது உன்னோடு ஒரு துணையை அழைத்துச் செல்.

(2) முகம் தெரியும் வரை மாமியார் வீட்டில் இருக்காதே!

(1) ஒரு நாள் அவசரமாய் வெளியூர் செல்லும் வேலை ஒன்று இருந்தது. சுற்றியுள்ள பங்காளிகள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. நண்பர்களும் அவரவர்கள் வேலை விஷயமாய் எங்கெங்கோ சென்று விட்டனர். வீட்டிலிருந்த நாய் குட்டியை துணைக்கு அழைத்துச் சென்றேன். வழியில் பயணக் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டேன். விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு இறந்து கிடந்தது. நாய் அதனை கடித்துக் குதறி இருந்தது. அப்பா சொன்னதில் ஒரு உண்மை கற்றுக் கொண்டேன்.

(2) கல்யாணம் முடிந்து மாமனார் வீட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். முதல் நாள் ஏக தட புடல். இலை நிறைய பட்சணங்களும், சாப்பாடும் வயிறு நிறைந்து போனது. இரண்டாம் நாள் முதல் நாளில் பாதி உணவு தான் கவனிப்பும் சுமார் தான். மூன்றாம் நாள் மீதி இருந்ததில் தண்ணீர் ஊற்றி, நீரும் சோறும் தட்டில் காட்சியளித்தது. குனிந்து கையால்அள்ளப் போன போது, ப்ளேட்டில் முகம் தெரிந்தது. அப்பா சொன்ன உண்மைகள் ப்ளேட்டில் உணர்த்தியது.

எழுதியவர் : முரளிதரன் (17-Feb-14, 8:50 am)
Tanglish : appa sonna kathai
பார்வை : 159

மேலே