புதுவிதமான காதல் சத்தம்
முதன் முறையாய் உனை
பெண் பார்த்தபோது
முதன் முறையாக உன்னால்
நான் வெட்கப்பட்டபோது
என்னுள்
என் இதயதுடிப்பு
விசித்திர ஒலியெழுப்பியது.
ஆஹா எப்படி விவரிப்பேன்
அந்த வித்தியாச ஒலியை...?
கண்ணிமைக்கும் சத்தம்
கன்னிவெடி சத்தமாய்
சப்தமிட்டது என்பதா ?
உணர்ச்சியும் உயிரும்
இதயகுடுவையில் கொந்தளித்த
சத்தம் என்பதா..?
விவரிக்க முடியாமல்
தவிக்கிறேனடி..!
விபரம் அறியாமல்
உளறுகிறேனடி..!
அந்த சம்பவத்தில்
உருவான சத்தம்
இதுவாக இருந்திருக்கும்..!
என் செல்லமே
இதை கேள்..!
ஒரு விதை
நிலத்தை
வெட்டி முட்டி
தள்ளி விலக்கி
புதுசெடியாய் துளிர்க்குமே..!
அந்த துளிர்க்கும்
எழுச்சி சத்தம்
என்னுள் புதுஒலியாய்
காதலி ! காதலி !
என்று கேட்டிருக்கும் ..!!
------------------இரா.சந்தோஷ் குமார்.