விடியாத வானம்

இன்னும் எத்தனை காலம் தான்....
பெண்களின் விடியலில்,
பனியும் விலகாமல்.. சூரியனும் உதிக்காமல்
இருக்குமோ தெரியவில்லை...!

கனத்து போகிறது நெஞ்சு.......
இரண்டு வயது பிஞ்சு... மயங்கிய நிலையில் தெருவோரம் தூக்கி எறியப்பட்ட செய்தி கேட்டு......!

துடித்து போகிறது இதயம்......
ஏழு வெறி நாய்கள்...
ஒரு பெண்மானை வேட்டையாடியது கேட்டு.......!

வெறுத்து போனது இதயம்......
பக்கத்துக்கு வீட்டு,
என்பது வயது மூதாட்டி
கற்பிர்காக போராடி உயிர் விட்டது
கண்டு......!

எங்கே போகிறது மனிதம்...........!
தங்கம் விலை ஏற்றம் மட்டும்,
பெண்கள் பிறப்பு விகிதம் குறைவதர்க்கு
காரணம் அல்ல...!

என்னை போன்ற தொண்ணூறு சதவீத பெண்களின் வேண்டுதல்........
கடவுளே எனக்கு பொண்ணு மட்டும் பொறக்கவே கூடாது.......!

எனக்கு தெரிந்து எந்த கதவுகளும் திறக்கவே இல்லை.....
ஏன் எனில் பனியும்விலகவில்லை,
சூரியனும் உதிக்கவில்லை.........!

எழுதியவர் : வித்யா.... (17-Feb-14, 1:36 pm)
Tanglish : vidiyadha vaanam
பார்வை : 185

மேலே