சூடானியப் பஞ்சம்
ஒருவேளை இருவேளை
ஒருநாள் இருநாள்
ஒருமாதம் இருமாதம்
வயிறார ஒருபோதும்
உண்டதேயில்லை!
உண்டாயாயென
கேட்டாரைக் கண்டதேயில்லை!
பச்சைக்கறி கூட இல்லை
பிள்ளைப் பசி ஆறிட!
வஞ்சத்துடன் பஞ்சமது
தலைவிரித்து ஆடுதிங்கே!
பெருமையுடன் உலகத்தார்
கொடுத்துவிட்டார் எங்களுக்கு
வறுமைக்கோட்டுக்கீழ் பட்டம்!
கொள்ளையான உலகச் சட்டம்!
சா வதற்கு பயந்துகொண்டு
எறும்பு கூட எட்டிச்சென்று
விட்டது எம் நாட்டை விட்டு!
எஞ்சியுள்ள பருக்கையினி
எத்தனை நாள் தெரியவில்லை!
கொஞ்ச நஞ்ச இரக்கம் வந்தால்
உணவளித்திடு இறக்கும் முன்னே!
மிச்சம் மீதியாகிவிடும்
எச்சில் இலை இருந்தாலும்
அனுப்பிவிடு என் தோழா
அது போதுமிங்கே!