என்னை காதலிக்க வைக்க மட்டுமே

உன் விழிகளை விட அதில் தெரியும் கர்வம் பிடிக்கும் என்றாய்......!

உன் இதழ்கள் நீ புன்னகைக்கும் போது இருப்பதைவிட என்னை திட்டும் போது மிக அழகாக இருக்கிறது என்றாய்.......!

நீ கைநீட்டி பேசும்போது நகக்கண்ணில் கூட பூக்கள் பூக்கிறது என்றாய்............!

என்மீது கோபம் கொண்டு மௌனம் சாதிக்கையில் சூடான உன் மூச்சு காற்று சுகமென்றாய்.......!

என்னை பார்க்க பிடிக்காமல் நீ முகத்தை திருப்பி கொள்கையில்....... எப்போதுமே உனக்கு பிடிக்காதவனாகவே இருக்க விரும்புகின்றேன் என்றாய்....!


நீ என்னை விரும்பி இருந்தால் கூட,
நான் உன்னை
இவ்வளவு ரசித்திருப்பேனா
என்று தெரியாது....
என்னை வெறுக்கும்போதும்,
முறைக்கும்போதும்,
இதழ்களை சுளிக்கும்போதும்,
என் மீதான உன் கோபத்தை அடக்கும்போதும், உன் அழகை சொல்லி மாளாது......,
என்றாய்......!

ஆனால்,
கடைசி வரைக்கும் உன் காதல் சொல்லாமல் என்னை காதலிக்க வைக்க மட்டுமே
என் காதலனாக இருந்திருக்கின்றாய்........!

ஆம் அவன் ஜெயித்துவிட்டான்....... அவன் நண்பர்களுடனான பந்தயத்தில்......!

(நான் சொல்லல மச்சீ........ இந்த பிகர இன்னும் ஒரே மாசத்துல கரெக்ட் பண்ணி காட்ரேன்னு...... எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா....) பிகர்களே உஷாரு..... ப்ளீஸ்.......!

எழுதியவர் : வித்யா... (17-Feb-14, 2:47 pm)
பார்வை : 354

மேலே