உப்பு
காதலில்
தோல்வியுறும்
மீன்களின்
கண்ணீர் !
தொட்டியிலிருக்கும்
தண்ணீரில்
தெரியாதென்றாலும்
கடல் நீரில்
தெரிந்துவிடும்
தேங்கி நிற்கிற
கடல் மீன்களில்
சோகம் !
சுவையுணரார்
சோகமரியார்
சொந்தமில்லா
சோகத்தையும்
கடலிலிருந்து
பிரித்தெடுக்க
உப்பு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
