விழி ஒரமாய் ஒரு நீர் துளி

அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !

புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !

மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"

வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !

திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"

அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள் வலியில் சிரிக்கும்
நிஐம் உலகத்தின்
பித்தன் நான் !

எழுதியவர் : PAUL (17-Feb-14, 3:43 pm)
பார்வை : 995

மேலே