ராணுவ வீரனின் நண்பன்

ஏதோ ஒரு மூலையில்
எவனோ ஒருவன் வருகைக்காக
காத்திருக்கும் என் துப்பாக்கியின் கண்கள்
நண்பனைக் கண்டதும்
அவனை அணைக்க ஏங்கும் குண்டுகள் .......
நண்பனின் துப்பாக்கி குண்டகளோ
என்னைக் கண்டு ஓடோடி வரும்
தசைகள் கிழிந்து
எலும்புகள் உடைந்து
உயிருக்குள் கலக்கும்
நண்பனும் நானும்
விண்வெளி வாயுளில்
மற்ற நண்பர்களுக்காக காத்திருப்போம்

எழுதியவர் : கண்மணி (8-Feb-14, 9:52 pm)
பார்வை : 550

மேலே