நீதிமன்றக் கூண்டில் நிற்கும் நாய்
உத்தர பிரதேசத்தில் ஒரு போலிஸ்காரனை நாய் ஒன்று கடித்து விட்டதாம். அந்த நாயின் மீது ஃ எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதாம்.
நாய்க்கு என்ன தண்டனை தரப்படும் ?
கற்பனையில் கோர்ட்காட்சி.
குற்றவாளிக் கூண்டில் நாய் நிற்க, அரசு தரப்பு வக்கீல் கேள்விகள் கேட்கும் முன் கீதையைக் காட்டி, "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை" என்று சொல்ல சொல்கிறார்.
அதற்கு, நாய் வாலை ஆட்டிக்கொண்டே, |லொள் ..லொள்..என்று சொல்ல, அடுத்து அரசு தரப்பு வக்கீல் நாயிடம் ..
உன் பெயர் என்ன
லொள் லொள்
கணம் கோர்ட்டார் அவர்களே .. இந்த நாயின் பெயர் லொள் லொள்.
நீ இங்கு நிற்கும் போலீஸ்காரரை கடித்தது உண்மை தானா
லொள் லொள்
தவறு ஒன்றும் செய்யாத அவரை கடித்தது சட்டப்படி குற்றம். இது தெரியுமா உனக்கு
லொள் லொள்
அங்கு கூடியிருந்த மக்கள் எல்லாம் சிரிக்க, நீதிபதி, "டக் டக்" என்று மேசையில் தட்டி, "அமைதி .. அமைதி" என்று சொல்கிறார்.
இதை அடுத்து, சட்டப்படி ஒரு நாய்க்கு தண்டனை கொடுப்பதானாலும், அதை நன்றாக விசாரித்த பின் தான், செய்யவேண்டும். எனவே, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த நாய்க்கு வக்காலத்து வாங்க அரசு தரப்பில் இருந்து ஒரு வக்கீல் நியமிக்கப் படவேண்டும். எனவே, இந்தக் கேசை அடுத்த மாசம் பத்தாவது தியதிக்கு ஒத்தி வைக்கப் படுகிறது என்று சொல்லி, அது வரை அந்த நாயை அரசின் செலவில், போலிஸ் கஸ்டடியில் வைக்க ஆணை இடுகிறேன் என்று சொல்லி முடித்தார்.
=தொடாரும் =

