ஆன்மாவின் குரல்
ஆயிரம் உதிரத்துளிகள்
புரிந்த தனிப்போரிலே
வெற்றி வாகை சூடினேன்...
ஓர் பௌர்ணமி இரவில்...................!
தட்டினேன் திறந்தது
அரண்மனைக் கதவு.......
தேடாமலே கிடைத்தது
அரியணையும் எனக்கு.......!
இருட்டுக்கு வெளிச்சமாய்
என்னை வட்டமிட்டது,
உன் சிரிப்பொலி........!
கலகல வளையோசை
கேட்கிறது,
ஓ.... பத்தில் ஒன்று மட்டும்தான்
குறைகிறது என நினைத்தேன்.......!
ஆசைக் கயிற்றில்
பட்டமாகப் பறந்து வந்தேன்
உன்னை பார்ப்பதற்கு.......!
ஆனால் நீயோ........
என்னை பார்க்க பிடிக்காமல்
பல்லக்கை அலங்கரித்து
பாடையில் ஏற்றி அனுப்பிவிட்டாய்.....,
பாதாளத்திற்கு.....!
மூங்கில் இழை மேல்,
முத்துப்பனிதுளி போல்
உறகிய ஒரு,
பெண் சிசுவின்
ஆன்மாவின் குரல்........!