யாதுமாகி நின்றாயடா

உற்றார் பெற்றாரை பிரிந்து
உயிரான நட்பை துறந்து
ஒன்றான மண்ணை மறந்து
வயிற்று பிழைப்பிற்காய்
சொந்த நாட்டில் அகதியென
சோறு தேடி புறப்பட்டேன்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
வஞ்சிக்குமா என்னை
வந்திறங்கிய என்னை
வாரியனைத்தது சென்னை
நடைபாதை கடையில் வேலை கெடுபிடி
நீயோ அங்கோர் எடுபிடி
வார்த்தை இன்றி தவித்த என்னை
வரவேற்றவன் நீ
ஒரே ஊருமில்லை
ஒன்றான உறவுமில்லை
ஒரே தெருவுமில்லை
ஒன்றாய் படிக்கவில்லை
பால்ய நட்புமில்லை
பழகிய வாய்ப்பும் இல்லை..
சோற்றுக்காய் வந்த என்னை
சொந்தமாய் ஏற்றுக்கொண்டாய்
அன்றுமுதல் இன்றுவரை
அனைத்துமாகி நிற்கின்றாய்
அம்மை அப்பனாய் சிறக்கின்றாய்...
நட்பென்ற பந்தத்தில்
நாளும் எனை ஆளுகின்றாய்
நண்பனாய் நீ கிடைக்க
என்ன தவம் செய்தேனோ?

எழுதியவர் : சித்ரா ராஜ் (18-Feb-14, 12:06 pm)
பார்வை : 184

மேலே