அடங்காக் கவிதை

கண்ணின் காலங்கள் கரையைக்
கடக்கையில் காலாவதி ஆகி விடுகிறது !

காதற்று அதனை காலாவதி ஆக்கி விடுகிறது
தன்னின் அடிமையாய் மாற்றி விடுகிறது !

புறக்காற்று எழுத்தில் நுழைந்து
முளைத்து வளராக் கவிதை
வெறும் குடுவை போலத்தான் !

அகக்காற்று கொண்ட கவிதை
மழைநீர் போல மிகவும் தூய்மை !

மனம் தாண்டும் தொலைவு கூட
கண்கள் தாண்டுவதில்லை ஏன்!

செம்மைக்காற்று செவிகளில்
கவித்தென்றல் கைகளில் நடனமாடி
காவியக் காளையை விடிந்தது எனக்கு
அது
என் தேவதையை பார்த்த நாள் (பொன்னாள்)

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (18-Feb-14, 6:26 pm)
பார்வை : 62

மேலே