இத்தினம் காண்பி காதலை

காதலர் தினத்தில்
உனக்கொரு பரிசு
தருவேன் என் இதயம்
காண்பிப்பாய் உன்விழியில்
ஓர்காதல் இத்தினமாவது
காத்திருக்கிறேன்
நீ அடிகள் வரும் பாதையில்
கண்திறந்து பார்
நீ மிதித்துச்சென்றது
இம்மண்ணை மட்டும் அல்ல
என்மனதையும் தான்
விடைகொடு அன்பே
ஏன் மறுத்தாய் காதலை
மாற்றான் தந்த
தங்கச்சங்கிலியா
உன் மனதை நிரப்பியது
உண்மையில்
இங்கு இதயத்தைவிட
இதயம் பொறித்த
சங்கிலிகுத்தான் விலை அதிகம்
-இப்படிக்கு முதல்பக்கம்



எழுதியவர் : கௌரிசங்கர் (13-Feb-11, 8:00 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 324

மேலே