அவசர உலகமே கொஞ்சம் நீ ஆசுவாசப் படுத்திக் கொள்
நாய் கூட தனது பல குட்டிகளை
நலமாய் கர்ப்பப் பைக்குள் வளர்க்கிறது
நாளும்பொழுதும் வண்டிகளில்
நசுங்கிப் பிதுங்கும் குழந்தை நிலை வேறு...!!
அவசர உலகத்தில் அவசியம் பணம்
அதற்காய் ஆகலாமா மனிதமும் பிணம் ?
ஐயோ பாவம் அந்தச் சிறுவன் அவன்
அப்பாதான் ஓட்டுறார் அந்த வண்டிய...!!
விழமாட்டான் என்ற தைரியம் அவருக்கு
விதிக்கப் பட்ட விலைவாசி அவருக்கு சொன்னது
விரும்பியே திணிக்கிறார் வலிகளை அவனுக்கு
விருப்பமின்றி சகிக்கிறான் வேதனையை இன்பமாய்