எனது கட்சித் தலைவர்

இடைஞ்சலாக கிடந்தது நடுரோட்டில்
அசை போட்டபடி மாடுகள்......
போக்குவருத்துக்கு இடஞ்சல் என்று தெரிந்ததால்
அதை விரட்டி விட்டு - மிக மிக
பெரிதாக வைத்தேன்
என் கட்சி தலைவரின் கட்டவுட்டு......!!
சிரித்தபடி எதையோ சுட்டிக் காட்டி
கையை நீட்டிக் கொண்டிருந்தார்
கட்டவுட்டில் தலைவர்......
அவர் காட்டிய திசையில்
அடல்ட் ஒன்லி சுவரொட்டி ஓட்டப் பட்டிருந்தது..
பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகள்....
பரிதாபமாக நடந்து சென்றன......
அவைகளின் பார்வையில்
அந்த கட்டவுட்டோ
அந்த சுவரோட்டியோ தெரியவில்லை
காரணம்
ஆ வென்று
வாயைப் பிளந்தபடி கிடக்கும்......
மூடப் படாத பாதாள சாக்கடை குழியே தெரிந்தது..
அவர்களை
அவர்கள் மட்டுமே தற்காத்துக் கொள்ள வேண்டும்
அசிங்கங்களை பார்த்துச் செல்ல
அவர்களுக்கு விருப்பமில்லை...........
எனினும்.....
நிழலுக்கு ஒதுங்கலாம் என்று
அந்த கட்டவுட்டை நோக்கி ஓடி வந்த ஒரு சிறுவன்
கவனிக்க மறந்தான் ஒரு மிகப் பெரிய
கண்டெயினர் லாரியை........
அடுத்து நடந்தது............
இதையும் பார்த்து
இளித்தபடி கட் அவுட்டில் கட்சித் தலைவர்......