இவள் ஒரு நிலா பெண்
கருப்பு வெள்ளை
ஆடையில் ஒரு
அழகிய பெண்மான்
தன் தலை தாழ்த்தி
விழி புருவம் உயர்த்தி
பார்வை என்னும்
அம்பால் பாவை எனை
தைத்தால் வேதனை
இல்லாத காயம்
அவள் காதணியும்
சங்கு கழுத்தணியும்
செந்தூரத்தில் மின்ன
சில்லாய் தெரித்தது என்
மனம் சொல்லாமலே
வானில் இருந்தாலும்
மண்ணிறங்கி வந்தாலும்
நிலவு என்றும் அழகுதான்
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...