என் இறைவன்

கருவில் உருவாகும் முன்
என் உருவம் கண்டவன்..
என் பெற்றோர் என் அகம் காணும் முன்
என் அக அழகை கண்டு என்னை நேசித்தவன்
என்ன பெயர் சூட்டலாம் என
என் பெற்றோர் சுழல
அதற்கு முன்பே எனக்கு பெயர் சூடி மகிழ்ந்தவன்
அன்பில் அன்னையாய்
தவறு செய்யும் போது கண்டிக்கும் தந்தையாய்
சோர்ந்துபோகும்போது தோழ்கொடுக்கும் தோழனாய்
என்றும் அன்பு மாறாமல் இருப்பவன்
என் இறைவன் நீயே!

எழுதியவர் : சத்யா ஏஞ்சல் (19-Feb-14, 7:35 pm)
Tanglish : en iraivan
பார்வை : 73

மேலே