நாகரிக காதல்
கடிதத்தில் காதலித்த எனக்கு
கம்ப்யூட்டர் காதலும்
கைப்பேசி காதலும்
வியப்பாகத்தான் உள்ளது
விரக்தியாகவும் உள்ளது..!
அவரவருக்கு ஒரு காதல்
அதில் அதிருப்தி என்றால்
அடுத்த காதல்...
ஏனென்றால்,
இப்போதுதான் காதல் மிகவும்
மலிவாக கிடைக்கின்றதே..!!!
உண்மை காதலின்
உன்னதத்தை உணர முடியவில்லை
உணசியற்ற மிருகங்களால்...
அன்று பலர் இறந்து
காதலை வாழ வைத்தனர்..!
இன்று பலர் வாழ்ந்து
காதலை இறக்க வைக்கின்றனர்..??
அன்றைய காதல்
மனிதநேயத்தை வளர்த்தது..!!
இன்றைய காதல்
மக்கள் தொகையை வளர்க்கின்றது..??
=======அருணன் கண்ணன் =======
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
