வெறும் கருத்து தான்
நாம காத்திருக்குறப்போ உள்ள போன பேஷன்ட்டை பத்து நிமிஷம் பாக்குற அதே டாக்டர் நாம போனா மட்டும் ரெண்டு நிமிஷத்துல அனுப்பிடுறாரு !!
நம்ப மட்டும் துட்டு கம்மியாவா குடுக்கரோம் !!
===============================================
காப்பித்தண்ணி கொண்டாம்மான்னு சொன்னா காப்பியும், தண்ணியும் கொண்டு வந்தா புத்திசாலி ..காப்பிய தண்ணி மாதிரி கொண்டுவந்தா பொருளாதார மேதை !!
========================================
நேத்திக்கு என் நண்பரோட அப்பா காலமாயிடார் அதுக்கு போனப்ப அவரின் இறுதி யாத்ரேல ஆலாளுக்கு ஒரு சம்ரதாயம் சொல்லி குழப்பினப்போ, செத்தவர் எழுந்து எல்லாரையும் நாலு அப்பு அப்பினா நல்லாருக்கும்னு தோனித்து !!
==============================================
பெண்ணின் திருமண வயது 21
ஆணின் திருமண வயது அவன் தங்கையின் திருமணத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது !!