மன சாட்சி

மக்களுக்காக உருவான ஆட்சி!
முன்னோர்கள் தந்த எழுச்சி!

நன்மைக்கு எதற்கு சூழ்ச்சி!
எப்போது மாறும் விழ்ச்சி !

நாட்டை காக்க இல்லை போட்டி
நாட்டை ஆள எத்தனை வேட்டி!

உண்மைக்கு போடுவோம் வாக்கு
உரிமைக்கு தொடருது இன்னும் வழக்கு!

திறந்து கிடக்குது பல புழல்
இன்னும் நடக்குது சில ஊழல்!

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மாற்றம்
என்று தீரூம் எங்கள் ஏமாற்றம்?

விவசாயம் எல்லாம் மாறிபோச்சு
விலைவாசி கூட ஏறி போச்சி!

ஊரோரம் எல்லாம் பிளாட் ஆ போச்சி
குடிக்கிற தண்ணி கூட காசா ஆச்சி!

கோயில் குளம் மாசு படுன்ஜி போச்சி
இனி என்ன செய்யும் ஆட்சி!

உங்கள் வெற்றிக்கு கட்டு கொடி
எங்கள் வாழ்கைக்கு தேவை படி!

நாங்கள் கேட்பது கொஞ்சம்
தீராத எங்கள் பஞ்சம்!

சாதிக்க துடிக்குது இளமை! வலிமை
இருந்தும் முடக்குது வறுமை!

இளமைக்கு போடு பாதை!
அதனால் அழியும் போதை!

நம் நாட்டுக்கு தேவை மேதை.....

நலம் பெருக தொடர்க ,,,,

எழுதியவர் : gomkarthik (20-Feb-14, 2:12 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
Tanglish : mana saatchi
பார்வை : 172

மேலே