மெல்லிசை

முள் கொண்டு கீற
தொடங்குகிறது
இதமாய் தலை தடவி
நெற்றியில் முத்தம் பதிக்கிறது
எங்கேயாவது நடந்து போக
சொல்கிறது
நடக்கும் போது
பறக்க வைக்கிறது
பறக்கும் தேவதைகளை
சூழ்ந்து கொள்ள அழைக்கிறது
கருந்தேவதைகள் சூழ
மிதக்கும் நேரம்
சில கோப்பைகளை உடைத்து
வண்ண நீர்களை
தெளிக்கிறது
நீர்த்துளி முனையில்
நாவினை வைத்து
நர்த்தனம் புரிகிறது
பின்பு
இறந்து விடுகிறது!