மாணவர்களின் எதிர்கால நம்பிக்கை
வெண்ணிலவில் வெண்மாளிகை...!
செவ்வாயில் செங்கரும்புத் தோட்டம்...!
பால்வழியில் ஒரு தேநீர் விருந்து...!
வானைக் கிழிக்கும் புகழுச்சி...!
கடலுக்கடியில் வாழ ஆராய்ச்சி...!
கோடிஸ்வரனாகும் பேராசை..
உலக அழகி மனைவியெனும் நப்பாசை...
இவையும், இன்னும் சிலவும்
மாணவனின் எதிர்கால நம்பிகைகளாம்...
பாடம் நடத்தும் வேளையில்
பகல் கனவு காண்கிறான்..
தன் வாழ்வின் நம்பிக்கைகளை
மனதில் உறுதி கொள்கிறான்...
நம்பிக்கை விதையில்
விடாமுயற்சி நீருற்றி
விருட்சமாய் வளரும்
வெற்றியின் கனியை
ருசிக்க விழைகிறான்..
கல்விக்குப் பணமா?-இல்லை
பணத்த்ற்கு கல்வியா?-என்ற
கேள்விக்கு விடை பெறுவான்..
தாய்நாடு வல்லரசாகும்...
நல்லரசால் வெற்றி காணும்...
வெற்றியினால் வாகை சூடும்...
ஆகையினால் நம்பிக்கை கொள்வான்..
ஆழிபேரலையை ஆள்காட்டி
விரலால் விரட்டிக் காட்டுவான்.
பூகம்பத்தை பூக்களால் வரவேற்த்திடுவான்...
வெள்ளத்தின் வேகத்தை
வெண்பஞ்சு கொண்டு தடுத்திடுவான்....
மொத்தத்தில் பேரிடர்களைப்
பேரின்பமாய் மாற்றிடுவான்....
வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றங்களால்....
தன்னை நம்பும் மனிதனையே
உலகம் நம்பும் என்பதை
அவனும் அறிவான்...
சிறகடிக்கும் தன் சிந்தனையால்
சிகரம் தொடுவான்....
நம்பிக்கை விளக்கை
விடாமுயற்சியால் தூண்டி விடுவான்..
காண விரும்பும் சாதனைகளைக்
கண்டுகளிப்பான்..
மாணவனே!! எதிர்கால நம்பிக்கை என்று
கவிதைகளின் வார்த்தைகளில் உங்கள்
கனவுகளை மறைத்துவிடாதீர்கள்..
எதிர்கால கனவுகள்
நிகழ்கால சாதனைகளாக மாற வேண்டும்...
வாழ்த்துக்களுடன்
ச.பாலமுரளி