நீல விழி ஓரங்களில்

நீலவிழி ஓரங்களில்
ஒரு மாலைத் தென்றல் வீசுதடி
சிவந்த அதரங்களில்
ஒரு செவ்வானம் சிரிக்குதடி
மலர்ந்த புன்னகையில்
மார்கழி கோலம் போடுதடி
மௌன முக எழிலில்
ஒரு அழகு மாதவம் புரியுதடி
காவியில்லா எழில் தவத்தில்
அழகின் அடிகளில் ஒரு கவிஞன்
சரண் புகுந்தானடி !
~~~கல்பனா பாரதி~~~