பேதை

அன்பா கார் முகில்கள் கரைந்து வழிந்த
பாதையில் உன் பார்வை சாரல் தீண்ட
முதன்முறையாய் நனைந்தேன் நானும் ,
தனிமை தீயாக தலையணை நீயாக
தவித்து காத்திருந்தேன் தட்டாத கதவருகே
கனவில் நினைவில் நீயிருந்தாய் என்னருகே ,
கல்லூரி சென்றேன் கனவே நீஅங்கே
கண் இமைக்காமல் வியந்து ரசிக்க கைத்தட்டி
கலைத்து சொன்னாய் மெய்யென்று ,
சாலையில் கொட்டிய நீரில் நம் பிம்பம் கண்டு
சலசலத்து சிரித்தது மழை ,இருவர் ஒரு நிழல்
தேட மாரி பொழிந்தன மலர்களெல்லாம் ,
உந்தன் அன்புக்கு அடிமையானேன்
உண்மை காதல் கொண்டு உன்னையே சரணடைந்தேன்
நம்மேல் நம்பிக்கை பிறக்க நாணம் இழந்தேன்
விவரமறியாமல் விரல் தொட விட்டுக்கொடுத்தேன் ,
மெல்ல மெல்ல இழை படித்தாய் ,அங்காங்கே
உயிர் பறித்தாய், பருவத்தை பதிவு செய்தாய்,
பல உணர்வுகள் பார்த்து ரசித்தாய்,கூடலில்
கொள்ளை இன்பம் என்றாய்,
உண்ட இல்லை சாலையிலே உணர்ந்தேன் காலையிலே ,
திகைத்து திணறி அழுதேன் அவனிடம்
அன்பா என்றேன் அவ்வளவே என்றான் ,
காதல் என்றேன் காமம் வரைதான் என்றான் ,
வேரின் காதல் பூக்கும் வரையன்று ,கனிக்கும் வரை,
தாயின் காதல் கருவறை வரையன்று கல்லறை வரை,
உன் காமம் முடிந்தாலும் ,என் காலம் முதிர்ந்தாலும்
நெஞ்சினில் உயிர் வாழ்கின்ற உன் நினைவது
மறந்தாயோ என் கனவே ...