பேருந்தில் நான் கண்ட காட்சி

பேருந்தின் கடைசி இருக்கை
அந்த ஜன்னல் ஓரத்தில்
புதிதாய் பூத்த ரோஜா மொட்டுக்கள்
போன்ற இரண்டு குழந்தைகள்
பக்கத்தில் அந்த மொட்டுக்களின்
தாய் பார்க்கவே அம்சமாய் இருந்தது...
பேருந்தை விட்டு இறங்கும் வரை தெரியவில்லை
அந்த தாய் தன் இரண்டு குழந்தைகளையும்
இரண்டு பக்க இடுப்பில் சுமந்து
செல்லும் போதுதான் தெரிந்தது.....?
கடவுள் கூட கருணை காட்டவில்லையே என்று
ஏனென்றால் அந்த இரண்டு மொட்டுகளுக்குமே
கண் பார்வை இல்லை....