வாழ்க்கை

கனவு கலைகிறது
நீ விழிக்கும் போது,

இரவு கலைகிறது
விடியும் போது

தடைகள் தகர்கிறது
முயற்சிக்கும் போது,

ஆசை விலகுகிறது
உன் தேவை தீரும் போது,

அன்பு கூடுகிறது
உன்னை பிரியும் போது,

ஆணவம் அழிகிறது
ஆசை தொலையும் போது,

வாசம் பிறக்கிறது
பூ மலரும் போது,

வாழ்க்கை பிறக்கிறது
உன்னை நீ உணரும் போது,

வாழ்வு முடிகிறது
உன் உயிர் பிரியும் போது....


அனுபவம்.....

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (21-Feb-14, 2:34 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 182

மேலே