என்னை பொறுத்த மட்டில் காதல்

இன்று சமுதாய சீர்கேடுகளில் ஒன்றாக விளங்குவது இந்த காதல் தான்,,,,,,,,,,,???

என்ன ஒரு அவல நிலை,,,, காதல் என்பதின் மனிதனின் உணர்ச்சி அதில் அதீத அன்பு வெளிப்படும்

அனால் இன்று அதன் நிலை மாறி வருகிறது,,, எனவே "என்ன பொறுத்த மட்டில் காதல்" - எனது சிறு விளக்கம்

மனிதம் ஒருவான காலத்திலேயே உருவானது தான் காதல் அதனால் தான் ஆதாமின் ஆப்பிள் இன்றும் இனிக்கிறது

காதல் மனிதனின் மனதை செம்மை படுத்த உருவானது தான்,,, எப்படி என்கிறீர்களா/?? காதலின் முதல் அத்தியாயம் பற்றி அறிய நாம் ஆதிகாலத்திற்க்கு தான் செல்ல வேண்டும்

மனிதன் உணர்ச்சி வந்தவுடன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றெண்ணி வாழ்தவன் அவனை ஒருவனுக்கு ஒருத்தி என வாழவைத்தது இந்த காதல் தான்

அந்த வாழ்வை உலகிற்கு பறை சாற்ற வந்ததே திருமணம்,,,,,,,,, திருமணம் பந்தத்திற்கு அடிப்படையே இந்த காதல் தான்

காதலுக்கு வடிவம் இல்லை,,,,,,, ஐம்பூதங்களை போல காதலும் அனைவருக்கும் சமமானது

இந்த உலகில் எந்த நல்ல விடயத்திற்கும் எதிர்மறை உண்டல்லவா !!! அதே போல காதலுக்கு வந்த எதிரி தான் காமம்!!

காதல் என்பது தூய நீரை போன்றது,,,, நீருக்கு மனமோ, சுவையோ, நிறமோ, வேற்றுமையோ கிடையாது,,,,,,,,

நீரை புனிதமாக, மகிழ்ச்சியாக, தேவையாக நாம் பயன்படுத்துகிறோம்,,, அது போல தான் காதலும்


நீர் எந்த கொள்கலனில் இருக்கிறதோ அதன் வடிவத்தை தான் பெறும்,,, நீர் எதில் கலக்கிறதோ அந்த நிறத்தை தான் பெறும்,,,, அந்த சுவையைத்தான் பெறும்

அது போல தான் காதலும் எந்த மனிதனின் குணத்தில் கலக்கிறதோ அவனின் குணமே அதில் வெளிப்படும்

அது மட்டுமல்ல,,, பொதுவாகவே நீர் அதியபடியானால் அமிலத்தின் வீரியம் குறையும்
அது போல தான் எந்த கொடுரனின் காதல் ஆத்மார்த்தமாக அதிகரிக்கிறதோ அவனின் கொடுரம் குறையும் அவனும் மனிதனாவான்,,,,,

காதலின் புனிதத்தை கெடுத்தது ஆண்களா ?? பெண்களா?? என்றால் இருவரும் இல்லை அவர்களின் ஆசைகள் தான்,,,,


சரி காதலில் பிரவு ஆண்களாலா?? பெண்களாலா?? என்றால் இருவராலும் இல்லை அவர்களின் எதிர்ப்பார்ப்புகளால்,,,,,,,,,,

இதெல்லாம் சரிவாராது,,, ஆசையும் எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் காதல் செய்ய முடியாது என்றால்,,,, ஏன் முடியாது முயன்று பார்க்காலாமே,,,,


விரும்பியவரை எதோ ஒரு காரணம் சொல்லி பிரிய முடியும்போது அவருக்காக தான் ஆசைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் விட முடியாதா என்ன ???

விட்டு கொடுத்து வரும் வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்கிறீர்களா??? ,,,, சரி வாழ்வில் ஒரு நொடி ஒரு விடயம் கூட நான் யாருக்காவும் விட்டு கொடுத்ததில்லை என்று நீங்க கூற முடியுமா ???
முடியாது எதோ ஒரு தேவைக்காக நாம் சிலவிடயத்தை விட்டு கொடுப்போம்,,,,,,,

அது ஏன் நம்மை விரும்பியவர்க்காக செய்ய கூடாது???????????????????????????????????

என்னை பொருத்தமட்டில் காதலில் தவறோ களங்கமோ??? கிடையவே கிடையாது சில காதலர்களில் தான் இதெல்லாம்,,,,,,,,,,,,,




எனவே காதலர்களே என்றும் காதலை குறை கூறாதீர்கள்,,,,,,,,,, நாடோடியாய் இருந்த நம்மை மனிதனாக்கியது காதல்,,,,,,,,,,

இன்னும் மனிதம் வாழ ஒரு காரணமாய் இருப்பது காதல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : நிலா மகள் (22-Feb-14, 11:28 am)
பார்வை : 243

சிறந்த கட்டுரைகள்

மேலே