நீர் வாசனை

மழைபொழிந்தது...
மண்ணில் நீர் தந்தது மண்வாசனை
மண் நீருக்கு தந்தது வேர் வாசனை
நாறும் பூவால் மணம் பெறும்
நாரும் பூவால் மணம் பெறும்
நீரும் வேரால் மணம் பெறும்
ஆம் நன்னாரி வேரால் மணம் பெறும்
வேர் நீர் குடிக்கும் தமிழினம் நம் இனம்...
மண்வாசனை நீரால்
நீர்வாசனை வேரால்...
அகில் சந்தன வாசனை தீயால்
பூவாசனை காற்றால்...
நம் பண்பாடும் மணக்கும்
வேர்வாசனை.......