மீனும் காதலும்

விழி மூடியே விழுந்தேன் வலையில்!
புழுவுக்கு ஆசை பட்டே இதயத்தை தொலைத்தேன்!
துடிக்கும் இதயத்தில் ...
அழகை கண்டு ரசித்தாயா!
உணவாய் உண்டு புசிப்பாயா!
துடிதுடிக்க வைத்து ரசிப்பாயா!
என்னை இதய கூட்டில் வைத்து
காலமெல்லாம் காப்பாயா!
அறியாமலே தவிக்கிறேன்!!
ஒவ்வொரு நொடியும் யுகமாய் ...!

எழுதியவர் : கனகரத்தினம் (23-Feb-14, 11:03 am)
Tanglish : meenum kaathalum
பார்வை : 309

மேலே