நட்பின் பிரிவு
நினைவுகள் இறக்கவில்லை,
நிறங்கள் மறக்கவில்லை,
நிழல்கள் அழியவில்லை,
நிஜங்கள் எம்மை விட்டு
சென்ற போதும்.......
கண்ணீா் விட்டு
வீங்கிய விழிகளில்
தோழி உந்தன்
விரல் பட்டதும்,
சுமை நீங்கி சுகங்கள்
நெஞ்சை தீண்டுமா!
யார் செய்த பிழையோ
நாம் இன்று சுமக்கிறோம்!
தொடுத்தது யாரோ,
வினாவினை நமக்குள்,
பிரிவெனும் விடை தோன்ற!!!