கவிதை வயல் கவிதை

உறக்கம் கலைத்த தூரிகை
நித்திரையில்லா கனவு
என் மன துக்கத்திலும்
உன்னுடல் வெக்கத்திலும்
என்றும் ஒன்றாய்
நின்றே அரவணைத்து
கொ(ல்)ள்வாய்,,
தூங்காத இரவுகளும்
உன்னோடு சுகமே
உந்தன் மேல் அந்த
காதலுக்கும் காதல்
உன்னை தீண்டாமல்
காதலித்தவர் எவருமில்லை
உள்(ள) எண்ணங்களை
முழு உருவாகப்படுத்தும்
எண்ணங்களின் சித்திரம்
சின்ன வார்த்தைகளின்
வர்ணசாலங்கள்
சொக்கும் சொல்லோவியம்
வான் மழையும்
வழிந்தோடும் அருவியும்
கடந்தோடும் காடுகளும்
கரைசேரும் கடலும்
பனிபடர்ந்த புல்வெளி
பாடித்திரியும் பறவைகள்
பறந்து விரிந்த பூமி
வான் மிதக்கும் நிலா
அவன் இவள் என்றே
படைப்பாளி கண்ணில்
பட்டவையெல்லாம்
கவிதை கவிதை கவிதை
கவிதைகள் என்றே
உனக்குத்தான் எத்துனை
உருவங்கள் அதனுள்
ஒளிந்திருக்கும் எத்துனை
உ(ள்ளங்)ண்மைகள்,,,,,

கவிதையோடு கவிதையாய் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (23-Feb-14, 10:21 pm)
பார்வை : 515

மேலே