கல்யாணமாம் கல்யாணம்

தென்றலுக்கு சேதி சொல்லி
தேதி பாருங்கள்
தேவிக்கும் தேவனுக்கும்
திருமண முரசறையுங்கள்

பாலுக்கும் தேனுக்கும்
பாலம் கட்டுங்கள்
கலப்படம் வராவண்ணம்
கவனம் கொள்ளுங்கள்

தோரணம் ஆயிரம்
தொங்க விடுங்கள்
தோழியர் குலவையில்
பொங்கல் இடுங்கள்

தாளத்துடன் மேளங்கள்
தவலும் முழங்கட்டுமே
தலைவாழை இலைபோட்டு
தனிவிருந்தும் நடக்கட்டுமே

தென்னைஓலை பந்தல்போட்டு
தெரு அடைக்கவேண்டும்
குலைவாழை மரம்கட்டி
குவலயத்தோர் வாழ்த்தவேண்டும்

பூந்தோட்ட எல்லைக்கு
புது காவல் போடுங்கள்
பூந்தேன் எடுக்க
பூச்சிகளுக்கு தடை போடுங்கள்

தேன்சிந்தும் மலரை
கிள்ளி வாருங்கள்
தேனிலவு நேரத்தில்
அள்ளித் தாருங்கள்

சொந்தங்களே பந்தங்களே
வந்து வாழ்த்துங்கள்
சொல்லிபுட்டேன் யாருமே
மொய் எழுதாதீர்கள்

இது தேவனுக்கும்
தேவிக்கும் கல்யாணம்
தெருவே கண்டதில்லை
இதுபோல் ஓர் கல்யாணம்.

எழுதியவர் : சுசீந்திரன் . (23-Feb-14, 11:07 pm)
பார்வை : 60

மேலே