இது குழந்தைப் பாட்டு

வானப் பெண்ணே வானப் பெண்ணே
கொஞ்சம் நில்லு -உன்
வானவில் ரகசியத்தை
எனக்கு மட்டும் சொல்லு

தாழம்பூவே தாழம்பூவே
தலை கொஞ்சம் திருப்பு -உனக்கு
தங்கநிறம் தந்து
மணமூட்டியது யார் சொல்லு

ஆடிஆடிப் போகும்
அருவிப் பெண்ணே -உன்
ஆரவார சந்தோசத்துக்கு
யார் காரணம் செப்பேன்

கூடி கூடிப் பறக்கும்
தேனீக்களே -மலர்
தேடித்தேடி தேனெடுக்கும்
ரகசியத்தை சொல்லுங்களேன்

முயலண்ணா முயலண்ணா -ஒரு
பந்தயம் வைக்கலாமா
பந்தயத்தில் நான் ஜெயித்தால்
நானுனக்கு அண்ணா .

சீறும்புலி சிங்கங்களே -நீங்க
சீறுவதை நிறுத்துங்களேன்
மங்கைகண் மான்கூட்டம்
மிரண்டு மிரண்டு ஓடுதே.

வெள்ளை நிலா பெண்ணம்மா-உன்னைப்
பெற்ற அம்மா யாரம்மா
அம்மா அப்பா இல்லாத அனாதையா
அந்த ஏக்கத்தில்தான்
அமாவாசையாய் தேய்கிறாயா ......

எழுதியவர் : சுசீந்திரன் . (23-Feb-14, 9:24 pm)
பார்வை : 50

மேலே