நான் நாலு ரவுண்டு அடிச்ச கதை - மணியன்

நான் நாலு ரவுண்டு
அடிச்ச கதைய.கேளு
நல்லாக் கேட்டு புட்டு
ரசிச்சு நீயும் கூறு. . . . . .

கொஞ்சம் கொஞ்சம் சேர்ப்பேன் பணம்
கோவணத்தில் முடிவேன் தினம்
குவாட்டர் வாங்கி அடிச்சதால இப்போ
லாட்டரி நான் அடிக்கிறது தப்பா . . . . . .

ஊறுகாய்க்கும் காசு இல்ல
உளறல் கேட்க நாதி இல்ல
திறந்து கிடக்கும் சாக்கடையே கூறும்
விழுந்து கிடந்து எழுந்த கதையும் நாறும். . . . .

ரோட்டு மேல படுக்கை ஆகும்
கூட்டம் சும்மா பார்த்துப் போகும்
ஆட்டம் பொட்டு அடங்கிடுவேன் நானும்
துட்டு கூட என்னைச் சேர நாணும். . . .

சென்னை எல்லாம் கேட்டுப் பாரு
திண்ணையில் தான் எனக்குச் சோறு
கண்ணுறங்கிச் சாவேனா என்று
பொண்ணுக எல்லாம் சாமியைத்தான் வேண்டும். .

ஆரு சொல்லி இன்னா ஆச்சு
நூறு அடிச்சா எல்லாம் போச்சு
ஊரு இப்ப இருக்கும் நிலையை பார்த்து
பாருல தான் நடக்குதய்யா கூத்து. . . . . . . .




*-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (23-Feb-14, 11:12 pm)
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே