குவியல் - கே-எஸ்-கலை
தேவதைகள் போனார்கள்
இராட்சசிகள் வந்தார்கள்
அழகு நிலையங்கள் !
═══ ═
நோயில்லா ஊரில்
எல்லா மருத்துவர்களும்
நோயாளிகள் !
═══ ═
சிசுக்கொலை தப்பானது
மாத்திரைகளும் உறைகளும்
சட்டப்படி விற்பனை !
═══ ═
சொல்வதெல்லாம் உண்மை
சொன்னவன் கடைசிவரை
சொல்லவேயில்லை உண்மை !
═══ ═
ஆணும் பெண்ணும்
திருக்குறளின் இருவரிகள்
பெண் இரண்டாம்வரி !?