என் பள்ளி தாய்

மழலை மொழி மாறா

முகம்தனை முத்தமிட்டு

அழைத்தாள் என் பள்ளிதாய்!!!!!



ஒன்றாம் வகுப்பெடுத்த

மேரி ஆசிரியைக்கு

மங்கலாய் தன் நினைவு

வரும் என் முகம்!!!!



பேயை அழைக்கவ

என்ற பக்கத்துக்கு சீட்டு தோழனிடம்

அழுகையுடன் தந்தேன்

என் சாப்பாடு டப்பாவை!!!!



அடைக்க முடியா கடனை

விட்டுவிட்டு சென்றான்

என் பள்ளி தோழன்

வாங்கிய

குச்சிகளை எப்பொழுது

திருப்பித்தர ???



தொலைபேசி எங்களை மறக்காமல்

வாங்கிக்கொண்டேன் எங்கும்

நங்கள்

தொலையாமல்

இருப்பதற்காக!!!!!!!



பள்ளி வாயிலில் கூவி

விற்கும் கொடிக்காய் பாட்டிக்கு

எப்படி புரியவைப்பேன்

இனி நான் அவள் வாடிக்கையாளர்

இல்லை என்று ???





முற்றும் அறிந்த ஞானியருக்கும்

உன் அருமை தெரியவில்லை

காரணம்,

அடுத்த பிறவி வேண்டாம் என்கிறார்கள்

அடித்துக் கூறுவேன்

உன்னை போல் ஒரு தாய்

இருந்தால் இப்பிறவி மட்டுமல்ல

இன்னும் ஏழேழு பிறவிகளுக்கும்

என் பால்ய வாழ்க்கை

உனக்கே சமர்ப்பணம் என்று

என் பள்ளி தாயே !!!!!!!!!!

எழுதியவர் : அருணா பொன்ராஜ் (24-Feb-14, 1:56 am)
சேர்த்தது : Aruna ponraj
Tanglish : en palli thaay
பார்வை : 544

மேலே