அடைமழை

சுகயீனம் ...
அவன் மனைவிக்கு ....
தன்னை கழுவுமாறு எச்சரித்தது -
குவிந்திருந்த அழுக்குத் துணி மூட்டை .....
முடியாது என மனம் நச்சரித்தாலும் ....
ஆற்றங்கரை நாடினான்......
பெரு மூச்சுடன் .....
அடித்து .....
கசக்கிக் .....
கழுவினான் .....
சலவைக்கல்லில்
தன் அழுக்கு முகில் உடைகளை ....
வானதேவன் .......
அழுத்திப் பிழிந்தான் ....
நீர் வழிய .....
அடை மழைப் பொழிந்தது ....
பூமிக்கு .....
அவன் நிலைக் கண்டு ....
ஏளனமாய் சிரித்தாள் ....
முன்னால் காதலி .....
பூமா தேவி .......