மழை
மரங்கள்
இல்லா தேசத்தில்
மழைமகளே
நீ வருவதில்லை
மண்ணுக்கு
உயிர்த்துளி தருவதில்லை !
வாகன
புகைகூட்டம்
உன்னை தடுக்கிறது
மண்ணை
சேரவிடாமல் பிரிக்கிறது !!
உன்
வருகைக்காக காத்திருக்கிறது
மனித இனம்
அதற்காக
இயற்கை வளங்களை
பாதுகாக்க
ஏங்குகிறது மனம் !!!