துளிப் பாக்கள்

மழை ஓய்ந்தும்
மேளங்கள் தட்டுகிறது
சேற்றுத் தவளைகள் !

நகரமாட்டேன் என்று
அடம் பிடிக்கிறது
குளத்து நிலவு!

வானமும் மரங்களும்
முந்தி செல்கிறது
குதிரை சவாரி!

பசிக்கிறது
சக்கரை நாவுக்கு
தண்டனை !

காயும் கனியும் இல்லை
நாவில் ஊறுகிறது
ஊறுகாய் !

எழுதியவர் : தயா (24-Feb-14, 9:51 pm)
பார்வை : 59

மேலே