நானும் பூச்சியும்
கையெழுத்து இடாதா
காசோலை... என் வாழ்வு
பார்த்து பார்த்து
பிழை இல்லாமல் எழுதி
பூர்த்தி செய்கிறேன்.....
பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கும்
முன்பே ஒற்றை பூச்சி
ஒன்று ரீங்காரமிடுகிறது...
ஒரு எழுத்து எழுதுவதும்..
ஒற்றை கையால் பூச்சினை
விரட்டுவதும்....
வெறுப்பில் கிறுக்கி..
வெற்று காசோலையை நாசமாக்கி
வெறுத்து தூக்கி எறிந்தேன்....
வாழ்க்கை ஏதோ ஒன்று ......
கற்றுத்தந்துக் கொண்டேயிருக்கிறது..