முதிர்ந்த மல்லிகை
காத்திருக்கிறது விழிகள்
வாசலைப் பார்த்து
கதவுகள் சொல்லுமோ
என் கனவுகளை ....!
காத்திருக்கிறது படிகள்
கோலங்கள் பார்த்து
கைவண்ணம் சொல்லுமோ
என் கனவுகளை...!
காத்திருக்கிறது ஊஞ்சல்
முற்றங்கள் பார்த்து
கைப் பக்குவம் சொல்லுமோ
என் கனவுகளை ...!
காத்திருந்த வாழையிடம்
மணமேடை சொன்னது
மவுனப் பரிகாரத்தில்
இவன் எத்தனாவது
வரன் என்று ...!