நெகிழிகள்

எங்கும் நெகிழிகள் !
எதிலும் நெகிழிகள் !
பார்த்த இடமெல்லாம்
பிளாஸ்டிக் குப்பைகளை
பத்திரப் படுத்துகிறோம் !
பாவச் செயல் இது
என்று எண்ணிட மறந்தோம் !
எதிர் கால சந்ததியின்
உயிர் கொல்லி - நெகிழிகள்
என்பதனை ஏன் மறந்தோம் ?
தோண்டத் தோண்டத்
சதைப் பிண்டங்களாய்
பிளாஸ்டிக் குப்பைகள் !
வீடுகள் தோறும்
தானியக் கிடங்குகளாய்
உயிர் மட்கா குப்பைகள் !
வீதிகள் தோறும் பாலிதீன்
பைகளின் கோரத்தாண்டவம் !
நாடுகள் தோறும்
நல்லுணர்வு இல்லை ;
எதிர்கால கல்லறைகள்
இப்பொழுதே நம் கண்களில்
நிதர்சனமாய்த் தெரிகிறது !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Feb-14, 12:03 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 50

மேலே