சின்ன சிரிப்பு 02

நிருபர்: ""உங்க கட்சி எந்த அணியிலே இருக்கு?''

தலைவர்: ""நொந்த அணியிலே இருக்கு''

-கே. நடராஜன்,
-
--------------------------------------
-
"இந்த டாக்டர் எப்பவும் மாத்திரைக்குப்
பதிலா "சிரப்'தான் எழுதித் தருவார்.''

""ஏன் அப்படி?''

""அவரை எல்லாரும் "சிறப்பு டாக்டர்'னு
சொல்லணுமாம்!''

-வி. ரேவதி,
-
-------------------------------------------
-.

* "எல்லா கேள்விக்கும் பதில் தெரியாவிட்டாலும்,
தெரிஞ்ச வரைக்கும் எழுதிட்டு வா! னு
சொன்னீங்களேப்பா!'

"ஆமாம், அதுக்கென்ன!'

"பக்கத்துல உட்கார்ந்து எழுதுன பையனோட
பரீட்சை பேப்பரிலிருந்து தெரிஞ்ச வரைக்கும்
பார்த்து எழுதிட்டேன்ப்பா.'

-அ. யாழினி பர்வதம்,
-
---------------------------------------

""பாண்டவர்களின் தாய் "குந்தி'க்கு ஏன் அந்தப்
பெயர் வந்தது...?''

"சும்மா "குந்தி'யே இருந்ததால் இருக்கும் சார்''

-என்.எஸ்.வி. குருமூர்த்தி,
-
-----------------------------------------
-
"இவ்ளோ பெரிய அரங்கத்துல அந்தப் பாடகர்
பாடுறார். ஒரே ஒருத்தர்தான் கேக்கறார். ஏன்?''

"அவர் பாடறது ஒருதலை ராகமாம்.'

த. முத்து,
-
---------------------------------------
-
என் பூட்டை உடைத்து 5 லட்சம் பணத்தை
திருடிட்டு போயிட்டாங்க.

ஐயோ! பூட்டுக்குள்ள எப்படி 5 லட்சம்
வச்சிருந்தே?
-
பா. மணிவண்ணன்,
-
====================================
நன்றி: சிறுவர் மணி

எழுதியவர் : சிறுவர் மணி (25-Feb-14, 12:03 pm)
பார்வை : 179

சிறந்த நகைச்சுவைகள்

மேலே