கூந்தல்
ஆடிவரும் ஆடிவரும் காற்றில்
அம்மிக் குழவியும் பறக்கும்
கூடிவரும் கூடவரும் கோதையின்
கூந்தல் வாசமோ மணக்கும்
பாண்டியன் சந்தேகத்தை
தூண்டிவிட்ட கூந்தல்
பரமனுக்கும் பாவலனுக்கும்
சண்டை போடவைத்த கூந்தல்
ஆண்டிமுதல் அரசன்வரை
அனைவரையும் கவர்ந்திழுக்கும் கூந்தல்
அந்த வெண்மேகம் தன்னிறத்தை
மாற்ற செய்த கூந்தல்
இரட்டை சடை போட்டு
இங்குமங்கும் நடனமாடும் கூந்தல்
இலக்கியத்தில் தனக்கென்று ஓரிடத்தை தக்கவைத்த கூந்தல்
குஞ்சலம் கட்டி
காற்றோடு கொஞ்சிய கூந்தல்
காலம் செய்த கோலத்தில்
காணாமல் போய்விட்ட கூந்தல்
கூந்தலோ கூந்தலிது
குமரிக்கு அழகு செய்த கூந்தல்
கலர்கலராய் ரிப்பன்கட்டி
காளையர்க்கு தூது விட்ட ( காவியக்)கூந்தல்.....