வரையாத வரைபடம் - poovithal

பிஞ்சுகளெல்லாம் பஞ்சுவைத்து நெஞ்சுயர
தலைஇருப்ப காய் கவரும் நேரமிதில்
வரைமுறைமீறி வயதுசெய்யும் வம்பில்
வஞ்சமில்லா விடலைகள்
விரல் மீறிய விளையாட்டால்
காய்க்கும்முன்னே கனியாகி
விளையும்முன்னே விலைபோகும் விசித்திரம்
விதிவழியே வீதியிலே தினம் நடக்குதிங்கே !

ஓரினமே சேருதடா வழக்கமில்லா
வழக்கு ஒன்னும் நடக்குதடா !
ஒருகூட்டில் தஞ்சமடா !
கூட்டாக மஞ்சமடா !
பகலிலே பண்பாட்டுக்கு பஞ்சமடா !
இரவானால் இலக்கணமும் கெஞ்சுதடா !
மதுவிலே மயக்கமடா !
மாதுவுக்கும் சமத்துவமாய்
ஏன் இந்த பழக்கமடா ?

இச்சைபோல் எச்சமாய் வாழ ! இனி
அச்சமில்லை ! அச்சமில்லை !
விதிப்பிழையாய் எவருமிங்கே
மிச்சமில்லை ! மிச்சமில்லை ! என்ற விடியலைநோக்கி சத்தமில்லாமல்
சருகாகும் என் சமூகமே !

விசையேறி பந்தாய்
திசையெல்லாம் திரிந்து
ஓசையில்லாமல் ஒடுங்கிபோகும்.
விலைமாதுவாய், விளையாட்டுபயலாய் !
வரைகோடில்லா வரைபடமாய்
வாழுதிங்கே என் வகையறாக்கள் !

வைகறையில் வந்தேனும் யாரவது
வரைந்துவிட்டு போகட்டும்
என்தேசத்து வரைபடத்தை
வரைகோடிட்டு வண்ணமாய் !

எழுதியவர் : பூவிதழ் (25-Feb-14, 3:23 pm)
பார்வை : 193

மேலே